மக்கள் மனம் வென்ற பிரிகேடியர்
சு.ப. தமிழ்ச்செல்வன்
சிறீ. இந்திரகுமார்
உலகத் தமிழ் மக்களைச்
சோகத்தில் ஆழ்த்திய தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.
தமிழ்ச்செல்வன் அவர்களின் வீரச்சாவு கடந்த 02.11.2007 அன்று நிகழ்ந்
துள்ளது.
தமிழ்
மக்களின் அரசியல் சுதந்தரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள்
களத்திலும் அரசியல் தளத்திலும் பணிசெய்த பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்
செல்வன் அவர்கள் வீரச்சாவை எய்திவிட்டார்.
மரணமடையும்போது நாற்பது வயதை எட்டிய சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள்
பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து
கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க விடுதலை
இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற பொறுப்பை அவர் மரண
மடையும்வரை பதினான்கு ஆண்டுகளாகத் தனது பணியைச் செவ்வனே
நிறைவேற்றியுள்ளார்.
பிரிகேடியரைப் பொறுத்த வரையில் அவரை மிகவும் நேசித்த தேசியத் தலைவர்
பிரபாகரன் அவர்களால் யதார்த்த பூர்வமான சிந்தனையையும், செயலையும்
புடம் போடக்கூடிய செயலினூடாக அறிவுபூர்வமாக வளர்க்கப்பட்டார்.
அதனால்தான் பிரிகேடியரால் சமகாலத்தில் அரசியல் ரீதியாகவும்
படைத்துறை ரீதியாகவும் செயற்பட முடிந்தது. அத்தோடு அவரது ஆற்றலானது
செயல் பூர்வ அறிவாக மிளிர்ந்தது. அரசியல் ரீதியில் தமிழ் மக்களின்
விடுதலை குறித்து ஒரு எத்தனிப்பை செய்துகொண்டு படைத்துறை ரீதியாகப்
பலம் பெறுவதொன்றே தமிழ் மக்களின் விடுதலையைச் செயல்
பூர்வமானதாக்கும் என்ற தேசியத் தலைவர் அவர்களின் விடுதலைச்
சிந்தனையை அனைத்துலக மேடைகளில் அவரால் உறுதியுடன் முன் கொண்டு
செல்ல முடிந்தது.
இத்தகையதொரு அளப்பரிய பணியை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.
தமிழ்ச்செல்வன் அவர்கள் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழ்
மக்க¨ளிடையேயும் அனைத்துலகச் சமூகத்தின் மத்தியிலும் ஆற்ற
முடிந்ததென்றால் அவர் களத்தில் உருவாக்கப்பட்ட ஒரு இராஜதந்திரி
என்ற தகைமையே அவருக்கு மூலகாரணமாக அமைந்தது.
பிரிகேடியரின் இருபத்து மூன்றாண்டுக் கால விடுதலைப் பணியை
எதிர்காலத்தில் ஆய்வு செய்கின்ற எந்தவொரு வர லாற்றாசிரியரும்
அவருடைய விடுதலைப் பணியை பல்துறை களினூடாகவும் ஆய்வு செய்ய
வேண்டியிருக்கும்.
ஏனெனில் அவருடைய விடுதலைப் பணியானது இரு கூறுகளாக நோக்கத் தக்கதாக
வுள்ளது.
அரசியல் ரீதியிலானது.
படைத்துறை ரீதியிலானது.
1984 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக
இணைந்து கொண்ட அவர் அமைப்பின் தொடக்கக்கால வளர்ச்சியில் முழுமையாக
ஈடுபட்டுள்ளார்.
தொடக்கத்தில் போராட்டத்தின் பின் தளமாக தமிழ்நாடு இருந்தபோது
தமிழ்நாட்டில் ஒரு மருத்துவப் போராளியாகச் செயற்பட்ட அவர் பின்னர்
களத்திற்கும், தளத்திற்குமிடையே தேசியத் தலைவர் அவர்களுக்கான
இணைப்புச் செயற்பாட்டாளராகச் செயற்பட்டதன் மூலம் அவரது ஆளுமை அன்றே
தேசியத் தலைவர் அவர்களால் இனங்காணப்பட்டுள்ளதுடன் முதன்மை
யானதாகவும் இருந்துள்ளது.
பிரிகேடியரின் விடுதலைப் பணியை ஒரு கால ஒழுங்கில் நோக்கும்போது
அமைப்பில் இணைந்து அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பொறுப்பேற்ற 1984
ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையிலான அவரது
முதன்மையான படைத்துறை ரீதியிலான செயற்பாட்டையும் 1993லிருந்து அவர்
வீரச்சாவடைந்த 2007 வரையான காலத்தையும் இரு கூறுகளாக நோக்கலாம்.
ஏனெனில் 1984 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆண்டு வரையான காலத்தில்
படைத்துறை ரீதியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான
ஒரு காலக்கட்டத்தில் செயற்பட்டுள்ளார். இக்காலப் பகுதியிலேயே
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க இந்திய
ஆக்கிரமிப்புக் கெதிரான இந்திய - புலிகள் போர் நடைபெற்றது.
இந்திய - புலிகள் போரில் அவர் தென்மராட்சி பகுதியில் தளபதியாக
நின்று இந்திய இராணுவம் வெளியேறும் வரை போராடியுள்ளார்.
இந்திய
ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக அக்காலத்தில் அவர் ஒரு வீரம்
செறிந்த போரை நடத்தியுள்ள துடன் இன்று அவரோடு கூடவே நின்று களத்தில்
போராடிய போராளிகள், தளபதிகள் நினைவு கூருகின்ற வகையில் தலைமையோடு
அவருக்கான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையிலும் எந்தவித
சிக்கலுமின்றி போராளிகளை வழி நடத் தியமை எந்தவொரு சூழ் நிலையிலும்
திறமையாக படை நடத்தும் அவரது ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றது.
இதேவேளை பிரிகேடியரின் இரண்டாவது கட்ட (படைத்துறை ரீதியிலான)
செயற்பாட்டில் 1991 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் யாழ். மாவட்ட
சிறப்புத் தளபதியாகப் பொறுப்பேற்றுச் செயல்பட்ட காலம் முதன்மை
பெறுகிறது.
அவர் யாழ் மாவட்டத் தளபதியாகப் பணியாற்றிய அக்காலப் பகுதியில் வட
போர்முனையின் கட்டளைப்பீடமாகத் திகழும் பலாலி முக்கூட்டுப்
படைத்தளத்தின் அச்சுறுத்தலிலிருந்து போராட்டத்தின் மையத்தளமாகத்
திகழ்ந்த யாழ்ப்பாணத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு தற்காப்புச் சமருக்கு
முகங்கொடுத்த அதேவேளை இவரது தலைமையில் பல வலிந்த தாக்குதல்களும்
முன்னெடுக்கப்பட்டன.
ஆகாயக்கடல் வெளிச்சமரைப் பொறுத்தவரையில் தமிழீழ விடுதலைப் புலிகள்
இயக்கம் முன்னெடுத்த முதலாவது மிகப்பெரும் மரபுவழிச்சமராக அது
அமைந்ததோடு அனைத்துலக ஊடகங்களினதும், படை ஆய்வாளர்களினதும் கவனத்தை
ஈர்த்த ஒரு சமராகவும் அது திகழ்ந்தது.
இந்தச் சமரில் கடல் வழியிலான இறக்கத்துக்கு எதிரான சமருக்கு
பிரிகேடியரே பொறுப்பாகச் செயற்பட்டார்.
இந்தச் சமரில் விழுப்புண்ணடையும் வரை அவர் களத்தை வழிநடத்தினார்.
இக்காலப் பகுதியில் கடற்புலிகளின் உருவாக்கமோ அல்லது கிட்டுப்
பீரங்கிப் படையணி மற்றும் குட்டிசிறி மோட்டார் படைப்பிரிவின்
உருவாக்கமோ ஏதும் இல்லையென்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நிலையில்தான் 1993 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் தமிழீழ
விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளார்ந்த ரீதியாக ஒரு மிகப்பெரும்
நெருக்கடிக்கு முகம் கொடுத்த நிலையில் தமிழீழ அரசியல்துறைப்
பொறுப்பாளராக பிரிகேடியர் நியமிக்கப்பட்டார்.
படைத்துறை ரீதியாக களங்களை வழிநடத்திய ஒருவர் ஒரு விடுதலை இயக்
கத்தின் கடினம் மிக்க அரசியற் பணியை ஆற்றும் பொறுப் பேற்றார்.
இவரது அரசியற்பணி யானது இவர் அரசியல்துறைப் பொறுப்பாளராகப்
பொறுப்பேற்ற 1993 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரையான
காலப்பகுதி பல்வேறு வகையிலும் முதன்மை பெற்றதாகவுள்ளது.
ஏனெனில்
உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமும் சந்தித்திராத மிகப்பெரும்
நெருக்கடிக்குத் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் முகங்கொடுத்துக்
கொண்டிருந்த நிலையில் அரசியற்பணியை முன்னெடுக்க வேண்டிய சூழமைவு
அவருக்குக் காணப்பட்டது.
இந்த நிலையிலும் அவர் நெருக்கடிமிக்க பல செயல் திட்டங்களைச்
சீர்செய்யும் வகையிலான வேலை திட்டங்களுக்குத் தலைமை தாங்க
வேண்டியிருந்ததுடன் அதனை வெற்றிகரமாகவும் செயற்படுத்தினார்.
இப்பணியை நாம் இரண்டு வகையில் நோக்கலாம்.
இராஜதந்திரத்
தளத்தில்
மக்களின் தளத்தில்
ஒரு விடுதலை இயக்கத்தின் இலட்சியம், கொள்கை என்பவற்றை செவ்வனே
மக்கள் மத்தியில் கொண்டு சென்று மக்கள் ஆதரவுத் தளத்தைக்
கட்டியெழுப்பும் பணியை ஆற்றுவது மிகக் கடினமான ஒரு பணியாகும்.
தொடர்ச்சியான போர் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் மக்களிடையே
இப்பணியை ஆற்றுவதென்பது மிகப்பெரும் சிரமத்தைக் கொண்டது. ஆயினும்
இப்பணியைப் பல்வேறு நெருக்குதலுக்கிடையே அவர் முன்கொண்டு சென்றார்.
விடுதலை அமைப்பின் கொள்கையை முன்னெடுப்பது, மக்களை அணி திரட்டுவது,
விடுதலை இயக்கத்திற்கு எதிரான அனைத்துலகத்தின் இராஜதந்திர
சமர்களுக்கு முகம் கொடுக்கின்ற அதேவேளை இலட்சியத்தின் மீது மக்களைத்
தொடர்ந்து உறுதி கொள்ளச் செய்வது என்பவற்றோடு ஒரு நடைமுறை
அரசிற்கான கட்டுமானங்களை உருவாக்கும் தலைமையின் எண்ணங்களுக்குச்
செயல் வடிவம் கொடுப்பது எனப் பரந்துபட்ட வேலை திட்டங்களை அவர்
முன்னெடுக்க வேண்டியிருந்தது.
ஆயினும் இக்காலப்பகுதியில் இவர் ஒரு மிகப் பெரும் போர் இடப்பெயர்வு
நெருக்கடிக்கும், இயற்கை அழிவுகளுக்கும் முகம் கொடுத்த மக்களின்
புனர்வாழ்வு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்ற வாழ்வியல்
நெருக்கடிகளையும் வெற்றிகரமாகக் கையாண்டார்.
யாழ்ப்பாண இடப்பெயர்வு
சுனாமி ஆழிப்பேரலை அழிவு
யாழ்ப்பாண இடப்பெயர்வைப் பொறுத்தவரையில் சுமார் ஐந்து
இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இரவில் இடம்பெயர்ந்த
சூழ்நிலையில் அதற்கு முகம் கொடுத்து வன்னியை நோக்கி இடம்பெயர்ந்த
மக்களின் இருப்புக்கு வழிகோலியது அவரது அரசியற்பணிக் காலத்தில்
ஈட்டிய மிகப்பெரும் சாதனையாக நோக்கத்தக்கது.
இத்தகையதொரு நிலையிலும் அரசியல்துறைக்கான சிவில் கட்டமைப்புகள்
குலையாது அவற்றின் மீள் எழுச்சிக்குப் பாடுபட்டமையானது முதன்மை
மிக்க செயற்பாடாகும். இதே போன்றுதான் 2004 ஆம் ஆண்டு தென்னாசியப்
பிராந்தியத்தில் இந்தோனேசியாவின் சுமத்திரா ஜாவா கடற்பரப்பில்
ஏற்பட்ட நிலவதிர்வு காரணமாக கரை யோரப் பிரதேசங்களில் ஏற்பட்ட
ஆழிப்பேரலை அழிவிலிருந்து மக்களைத் துரிதகதியில் மீள்நிலைக்குக்
கொண்டுவரும் செயல்திட்டம் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டபோது
அதனை வெற்றிகரமாகச் செயற்படுத்தி அனைத்துலகச் சமூகத்தின்
பாராட்டுதலையும், கவனத்தையும் தமிழீழ தாயகத்தை நோக்கி ஈர்த்தமையானது
இவரது திறனுக்குச் சான்றாகும்.
அனைத்துலகத்தின் உதவிகள் முழுமையாகத் தமிழ் மக்களுக்கு வந்தடைவதை
சிறிலங்கா அரசு தடுத்துக் கொண்டிருந்த நிலையில் எட்டக்கூடிய அனைத்து
வளங்களையும் ஒன்றுதிரட்டி சிறிலங்காவை விஞ்சும் அளவுக்குச்
செயல்பூர்வமாக அதனை எதிர்கொண்டமை யானது அனைத்துலக சமூகத்தின்
கவனத்தை ஈர்த்தமைக்குக் காரணமாக இருந்தது.
இச்செயல் திட்டமானது பாதிக்கப்பட்ட மக்களைத் துரிதகதியில் இயல்பு
நிலைக்கு கொண்டுவர மிகவும் பயனுடையதாக அமைந்திருந்தது.
இது பிரிகேடியரின் அரசியற்பணியில் மக்களின் தளத்தில் அவர் ஆற்றிய
மகத்தான பணியாக அமைந்தது என்றால் மிகையாகாது.
அரசுகளுக்கிடையான இறுக்கமான பிணைப்பி னூடாக முன்னெடுக்கப்பட்டு
வரும் இராஜாங்க உறவுகளுக்கு நடுவே விடுதலை அமைப்பொன்றின் புரட்சிகர
அரசியலை அனைத்துலக நாடுகளின் ஒத்திசைவுப் போக்கின் நடுவே முன்கொண்டு
செல்லுதல் என்பது ஒரு கடினமான பணியாகும்.
விட்டுக் கொடுத்தல் என்ற பேரிலும் இணைந்து செயற்படுதல் என்ற
கோதாவிலும் ஒரு விடுதலை அமைப்பை அரசியல் நீரோட்டத்துக்குள்
கொண்டுவருதல் என்ற புனிதம் கெட்ட இராஜதந்திர வலைப்பொறிக்குள்
வீழ்த்திவிட முயலும் அனைத்துலக இராஜதந்திர முயற்சிகளுக்கு ஈடு
கொடுத்து இலட்சியத்தையும், தலைமையின் முடிவுகளையும் பாதுகாக்கின்ற
இராஜதந்திரப் பாத்திரத்தைப் பிரிகேடியர் ஏற்றிருந்தார்.
இன்றைய அனைத்துலகச் சமூகமானது அனைத்துலக ரீதியாகக் குருட்டுத்தனப்
பார்வையினூடாக எல்லா இனங்களின் போராட்டங்கள் மற்றும்
முன்னெடுப்புகள் மீது பயங்கரவாத முத்திரை குத்த முனைந்து வரும்
இன்றைய உலக யதார்த்தத்தில் ஒரு புரட்சிகர இராஜதந்திரப் பணியைப்
பிரிகேடியர் மேற்கொண்டிருந் தார்.
பிரிகேடியர் அவர்களின் பதின் மூன்றாண்டுக்கால அரசியற்
செயல்பாடுகளின்போது இரண்டு சமாதான பேச்சுகளை எதிர்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பேச்சுவார்த்தை. (முன்னாள் சிறிலங்கா அதிபர்
சந்திரிகா காலம்)
நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானப் பேச்சுவார்த்தை
இவ்விரு சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போதும் பலகட்ட சமாதானப்
பேச்சுவார்த்தைகள் பிரிகேடியரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.
அனைத்துலகச் சமூகத்தின் இராஜதந்திர சிக்கல்களுக்குள்ளே, அனைத்துலக
ஊடகங்களின் சிக்கலுக்குள் அகப்படாது நேர்த்தியாக முன்கொண்டு
சென்றிருந்தார். இதில் நோர்வே அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட
அமைதியில் எட்டாவது கட்ட சமாதானப் பேச்சுவார்த்தையானது அதாவது
ஜெனிவா- II பேச்சுவார்த்தை பிரிகேடியர் தலைமையேற்று
முன்னெடுத்திருந்த மிகச்சிறந்த சமாதானப் பேச்சுவார்த் தைகளில்
ஒன்றாகும்.
பிரிகேடியரின் இராஜதந்திரப் பணிக்காலத்தில் அவர் ஆற்றிய மிகச்
சிறந்ததும் மிகவும் பாராட்டப்பட்டதுமான ஒரு இராஜதந்திரப் பணியாகவே
ஜெனிவா- II நோக்கப்படுகிறது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தீர்வுகளோ இணக்கப்பாடுகளோ ஏதுமற்ற
நிலையில் ஐந்தாண்டு களாகப் பேச்சுகள் மட்டுமே நீடித்து வந்த
நிலையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருந்த ஆகக் குறைந்தள விலான
மனிதாபிமான நெருக் கடிகளைக் கூட களைய முனையாத சிறிலங்கா அர சின்
போக்கை ஜெனிவா- II சமாதானப் பேச்சுவார்த் தையில் அனைத்துலகச் சமூ
கத்தின் முன்னிலையின் வெளிப்படுத்தி ஜெனிவா- II சமாதானப்
பேச்சுவார்த் தையின் முழுத்தோல்விக்கும் சிறிலங்கா அரசே பொறுப்
பென்பதை அந்தச் சமாதானப் பேச்சின்போது அவர் நிரூபித் திருந்தார்.
அத்தோடு ஜெனிவா- II சமாதானப் பேச்சுவார்த் தைக்குத் தமிழர் தரப்பில்
தலைமை தாங்கிய பிரிகேடியர் சிறிலங்கா அரசின் தரப்பில் பேச்சு
நாகரிகத்தைக்கூட கடைப்பிடிக்காத அநாகரிகப்போக்குக் காணப்பட்ட
நிலையிலும் பிரிகேடியர் நிதானமாகவும் அறிவுபூர்வ மாகவும் ஜெனிவா-
II பேச்சுவார்த்தையைக் கையாண்டிருந்ததை இராஜதந்திர வட்டாரங்கள்
அன்று பாராட்டிப் பேசியிருந்தமை கவனிக்கதக்கது.
ஆயினும் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டுமொரு
பேச்சுக்கான திகதியை நிருணயிக்கும் ஒரு வலுவிழந்த கோரிக்கையைப்
பிரிகேடியரின் முன்னிலையில் அனுசரணையாளர்கள் முன்வைத்தபோது அவர்
உறுதியாக அக்கோரிக்கையை நிராகரித்து தமிழர் தரப்பின் உறுதியை நிலை
நிறுத்தியிருந்தார்.
ஒரு கட்டத்தில் மென்போக்கு இராஜதந்திர அணுகுமுறையிலிருந்து சற்றே
விலகி அச்சுறுத்தும் இராஜதந்திர அணுகுமுறையை அனைத்துலகச் சமூகம்
கையாண்டபோது கூட பிரிகேடியர் புலிகளுக்கே உரித்தான உறுதியோடு அவற்றை
நிராகரித்திருந்தார்.

அதாவது அடுத்த கட்டப்
பேச்சுக்கான திகதி நிருணயம் செய்யப்படாது விட்டால் தமிழர் தரப்பு
பேச்சுக்குழு கொழும்பினூடாகப் பயணம் செய்வதில் சிக்கல்கள் ஏற்படும்
என்ற தொனியில் மிரட்டல் இராஜதந்திரத்தை பிரயோகித்தபோது பிரிகேடியர்
ஜெனிவாவில் வைத்து சர்வதேச இராஜதந்திரிகளுக்குப் புலிகுணத்தை
வெளிப்படுத்தினார்.
இந்தச் சம்பவத்தைப் பிரிகேடியரே பின்னர் பின்வருமாறு
தெரிவித்திருந்தார். அதாவது அடுத்த பேச்சுக்கான திகதியை நிருணயம்
செய்யாது போகும் பட்சத்தில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்
தினூடாகப் பயணம் செய்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதற்கு
இதுவொன்றும் பிரச்சனையில்லை. இந்தியாவினுடைய சமாதான முயற்சியின்போது
இந்தியாவின் தவறான செயற்பாடு காரணமாக நாங்கள் அப்போது பன்னிரண்டு
போராளிகளை இழந்தோம். இப்போதும் ஏதேனும் சிக்கலை ஏற்படுத்தினால்
மேலும் பதின்மூன்று போராளிகளை எமது விடுதலை இயக்கம் இழக்க நேரிடும்.
ஆனால் இது நோர்வேயின் சமாதான முயற்சியில் ஒரு புதிய தொடக் கமாக
இருக்கும் எனச் சாவிற்கு அஞ்சாத புலிகளின் குணஇயல்புநிலையில் மிகக்
காட்டமாக அனுசரணை யாளர்களுக்குப் பதிலளித்தார்.
இது எந்தவொரு சூழலி லும், எந்தவொரு தளத்திலும் தளராத பிரிகேடியரின்
உறுதி மிக்க இராஜதந்திரப் பணிக்கு மிகப்பெரும் சான்றாகும்.
பின்னர் தமிழர் பேச்சுக் குழுவினர் பாதுகாப்பாகப் பயணம் செய்வது
குறித்து அனுசரணையாளர்கள் வழமையைவிட அதிக சிரத்தையை
எடுத்திருந்ததுடன் அதில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தியதாகத்
தெரிவித்திருந்தார்.
இவ்வாறுதான் பிரிகேடியரின் இராஜதந்திரப் பணியும் மிகக்
காத்திரமானதாக அமைந்தது.
பிரிகேடியர் தனது இருபத்துமூன்று ஆண்டுக்கால விடுதலைப் பயணத்தில்
பதின்மூன்றாண்டுக் காலம் தொடர்ச்சியாகப் படைத்துறைப் பணியையும்
பதினான் காண்டுக் காலம் அரசியல் தளத்தில் இராஜதந்திரப் பணி, மக்கள்
பணியென விடுதலை அமைப்பின் வளர்ச்சிக்கும், மக்களின்
மேம்பாட்டுக்குமென அயராது உழைத்த விடுதலை இயக்கத்தின்
செயற்பாட்டாளராகத் திகழ்கிறார்.
பிரிகேடியரின் இறுதிக் காலப்பகுதியானது அரசியல் ரீதியாகவும்,
இராஜதந்திர ரீதியாகவும் படைத்துறை ரீதியாகவும் அவர் புடம்
போடப்பட்ட ஓர் இளம் தலைவராக, தேசியத் தலைவர் அவர்களின் எண்ணத்
திற்கு அமைவாக உருவாகியிருந்தார் என்றால் மிகையாகாது.